News
OCTOBER 2023
குரு உபதேசம் – 3837
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
வரும் காலம் ஞானசித்தர் காலம்தான் என்பதும், ஞானசித்தர்கள் காலத்தினிலே முருகப்பெருமானே தலைமையேற்று இவ்வுலகை ஆட்சி செய்ய போகிறான் என்பதும் உணர்த்தப்படும். ஞானிகள் ஆட்சியிலே பங்கு கொள்ள தன்னலமற்ற சேவையும், பொதுநோக்கும், பொருள்பற்று அற்றவராய், காமுகனாய் இல்லாதிருத்தல், பேராசையற்றவராய், உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், வாகன வசதி என அடிப்படை வசதிகளைப் பெற்று நாட்டுநலனிற்காக பாடுபடுபவர்கள் மூலமாகத்தான் ஆட்சி நடக்கும் என்பதையும் அறியலாம்.