News
OCTOBER 2023
குரு உபதேசம் – 3840
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
எவர் ஒருவர் முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி மனம் உருகி பூஜைகள் செய்து ஆசி பெறுகிறார்களோ, அவர்களுக்கு சரியை, கிரியை, யோகம், ஞானம் அனைத்தும் உணர்த்தப்படும். ஆதலின் முருகப்பெருமானை வணங்கியவர்க்கு முருகப்பெருமானின் அருட்கடாட்சத்தினால் பணத்திற்காக யோகம் கற்பிக்கும் பொய்தவ வேடதாரிகளிடம் சென்று ஏமாந்து போகவும் மாட்டார்கள். தகுதியற்ற வகையிலே யோகம் செய்து உடம்பை வீணாக்கி செத்துப் போகமாட்டார்கள், யோகமும் ஞானமும் முருகன் அருளாலன்றி வாய்க்காது என்பதும், யோகமும் ஞானமும் பக்தியினாலும், புண்ணிய பலத்தாலும்தான் வாய்க்குமே அன்றி பணத்தால் பெற முடியாது என்பதும், பணத்திற்காக பிறருக்கு யோகபலனை அளிக்கவும் முடியாது என்பதையும் தெளிவாக அறியலாம்.