News
DECEMBER 2023
குரு உபதேசம் – 3903
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
முன் ஜென்ம பாவம் ஒழியும் அளவு, தான தருமம் செய்திடல் வேண்டுமென்றும், அதற்குரிய வாய்ப்பும், பொருளும், பெறுவோரும், தருவோரும், உடனிருப்போரும், உதவுவோரும் என்றே அனைத்தும் ஞானத்தலைவன் முருகனை வணங்க வணங்கத்தான் கிடைக்கும் என்றும் அறிவான். எத்துணைப் பொருளிருந்தாலும் தானம் செய்யும் மனநிலை வராதிருப்பதற்கும், நாம் முன் செய்த பாவமே காரணம் என்றும், முருகனை வணங்க வணங்க நம்மிடம் உள்ள லோபித்தனம் நீங்கும் என்றும் அறியலாம்.