News
FEBRUARY 2024
குரு உபதேசம் – 3942
முருகா என்றால், வெப்பமாகிய சூரியகலையையும், குளிர்ச்சியாகிய சந்திரகலையையும், சேர்த்து ரேசித்து பூரித்து கும்பித்து ஸ்தம்பித்தால் அதுவே மோனமென்றும் பிரம்மம் என்றும் அறியலாம். இதை அடைய வேண்டுமென்றால் சுத்த சைவத்தை கடைப்பிடித்தும், காலை மாலை “ஓம் முருகா” என்று குறைந்தது பன்னிரண்டு முறையேனும் நாமத்தை சொல்லியும், மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ அன்னதானம் செய்து வந்தால் முருகன் அருளால் மோனநிலையாகிய பிரம்மநிலையை அறியலாம், அறிந்து அடையலாம்.