News
FEBRUARY 2024
குரு உபதேசம் – 3953
முருகா என்றால், எந்த காமதேகம் பிறவிக்கு காரணமாக இருக்கின்றதோ அந்த காமதேகமே பிறவியை ஒழிப்பதற்கும் காரணமாய் இருப்பதை ஞானிகளை வணங்கியதால் அறிந்து கொண்ட போதும், அதை நம்மால் கடைப்பிடித்து அதன் அற்புத இரகசியங்களை அறியஒட்டாமல் செய்வது நாம் முன் ஜென்மங்களிலே செய்த பாவங்கள்தான் என்பதை உணர்வான். முன் ஜென்ம பாவம் ஒழியும் அளவு, தான தருமம் செய்திடல் வேண்டுமென்றும், அதற்குரிய வாய்ப்பும், பொருளும், பெறுவோரும், தருவோரும், உடனிருப்போரும், உதவுவோரும் என்றே அனைத்தும் ஞானத்தலைவன் முருகனை வணங்க வணங்கத்தான் கிடைக்கும் என்றும் அறிவான். எத்துணைப் பொருளிருந்தாலும் தானம் செய்யும் மனநிலை வராதிருப்பதற்கும், நாம் முன் செய்த பாவமே காரணம் என்றும், முருகனை வணங்க வணங்க நம்மிடம் உள்ள லோபித்தனம் நீங்கும் என்றும் அறியலாம்.