News
MARCH 2024
குரு உபதேசம் – 3968
முருகா என்றால், தோற்றம், இயக்கம், வளர்ச்சி, தளர்ச்சி, வீழ்ச்சி அனைத்திற்கும் மூல காரணமாய் இருப்பது எல்லாவற்றையும் தோற்றி, வளர்த்து அழிக்கின்றதான இயற்கையே என்று முருகன் அருளால் அறியலாம். எந்த இயற்கை நம்மை தோற்றுவித்து வளர்த்து அழிக்கின்றதோ அந்த இயற்கை அன்னையின் துணைகொண்டே இயற்கையின் சுழற்சியை வென்று இயற்கையினின்று வெளிப்பட்டு தூய்மையாய் ஆகி இயற்கை அன்னையோடு கலந்து மரணமிலாப் பெருவாழ்வை பெறலாம் என்னும் மாபெரும் இரகசியமதனை பலகோடி வருடங்கள் அரும்பாடுபட்டு பலபல நிலைகளில் தோல்வியுற்று தோல்வியுற்று இறுதியில் ஒரு நாள் வெற்றியும் பெற்று மரணத்தை வென்றே விட்டான் அந்த ஆதிஞானத்தலைவன், என்றும் அழியா தலைவன், இயற்கை அன்னையின் அருளினை முழுமையாக பெற்ற முதல் மனிதன், இயற்கையோடு இயற்கையாக நீக்கமற கலக்கவும், கலந்தும் பிரியவும் வல்லவனாகி, இயற்கைக்கும் மேலானவனாய், எங்கும் நீக்கமற நீங்காது நிலைநின்ற பெரும் ஆற்றலாய் விளங்கி ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்றே ஐந்தொழில் பெற்ற வல்லவனானான் தன்னிகரற்ற முருகப்பெருமான்.