News
MARCH 2024
குரு உபதேசம் – 3971
முருகா என்றால், ஞானப்பேரொளியாம் முருகப்பெருமான்தான் காமவிகாரத்தை நீக்கித்தந்து காமவிகாரமற்றவனாக மாற்றுவான், பொருட்பற்றை நீக்குவான், பொறாமை இல்லாத பெருங்குணத்தை தருவான், கோபத்தினை நீக்கி சாந்த மனத்தை உண்டு பண்ணுவான், மன்னிக்கும் மனப்பான்மையை அருளிக் காப்பான், பழிவாங்கும் உணர்ச்சிகளை அற்றுப்போகச் செய்வான், தாய்மை குணத்தையும் அருளுவான், நமது குணக்கேடுகள் அத்துணையையும் நீக்கி நமது பாவங்களையெல்லாம் பொடிப்பொடியாக்கி நம்மைக் கடைத்தேற்றி ஞானியும் ஆக்குபவன் முருகப்பெருமான் அன்றி வேறொருவர் இல்லை என்பதை அறியலாம்.
அந்த முருகப்பெருமான்தான் யுகயுகத்தும் தாமே உலகோர்பால் கருணை கொண்டு உலகினில் அநீதியை அகற்றி நீதியைக் காக்க அவதாரமாக வந்து உதித்து மக்களைக் காத்து மக்களிடத்து உள்ள அறியாமையை நீக்கி ஞானஒளி பரப்பி ஞானிகளை பெருமளவில் உண்டாக்கி யுகமாற்றமும் செய்து மக்களை காப்பான் என்றும் அறியலாம்.
முருகப்பெருமான் பெருமையை உணரவும், அவன் திருவடியைப் பற்றி பூசித்து ஆசி பெறவும் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
துன்பமெலாம் போக்கி இன்பமே அருளும் முருகனைப் போற்றுவோம்! முற்றுப் பெற்று வாழ்வோம்!