News
MARCH 2024
குரு உபதேசம் – 3974
முருகா என்றால், பாவத்தையும் புண்ணியத்தையும் அறிந்து பாவமே மும்மல தேகமாக அமைந்து பிறவிக்கு காரணமாகிறது என்பதையும் அறிந்து, நம்மை வஞ்சித்து பிறவிகளை தருகின்ற பாவத்தின் சம்பளமான காமதேகத்தினில் உள்ள மும்மல கசடை நீக்கி என்றும் அழியாத ஞானதேகமான ஒளி உடம்பை பெற என்றும் மாறா இளமையும், முதன்முதலில் முற்றுப்பெற்ற மாமுனியும், எல்லையில்லா பேராற்றலும் பெருங்கருணையும், தாயினும் தயவுடை தன்னிகரில்லா தனிப்பெரும் தலைமைத் தெய்வமாம் முருகனின் அருளைப் பெற்றாலன்றி வேறொன்றினாலும் ஆகாது என்பதையும் உணரலாம்.