News
MARCH 2024
குரு உபதேசம் – 3984
முருகா என்றால், மும்மலக் குற்றம்தான் பிறவிக்கு காரணம் என்று அறிந்து மும்மலக் குற்றத்தை வேருடன் நீக்கி வெற்றி கண்டு மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்றவரும், இளம் சூரியனைப் போன்ற ஒளிதேகத்தினை பெற்றவனும், என்றும் மாறா இளமை உடையவனுமாகிய முருகப்பெருமான் ஆசி பெற்றுக் கொள்ள நினைப்பதுவே சிறப்பறிவாகும். முருகனது ஆற்றல் அளவிட முடியாதது. ஒரு நொடியில் பல்லாயிரங்கோடி அண்டங்களைப் படைப்பான். எறும்பை யானையாக்குவான், யானையை எறும்பாக்குவான். 90 வயது நிரம்பிய முதியவனையும் 16 வயது வாலிபனாக்கும் வல்லமை பெற்றோன் ஆற்றல் பொருந்திய முருகப்பெருமான் ஆசிபெற விரும்புகின்றவர்கள் “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்று காலை 10 நிமிடமும் மாலை 10 நிமிடமும் முடிந்தால் நள்ளிரவு 12 மணியளவில் ஒரு 10 நிமிடம் மந்திர ஜெபம் செய்து வந்தால் முருகன் அருளை பெறலாம்.