News
MARCH 2024
குரு உபதேசம் – 3991
முருகா என்றால், பாவ சுமைகளிற்கு காரணம் நாம் பல ஜென்மங்களில் உயிர்க்கொலை செய்து, புலால் உண்டதாலும், யான் என்ற கர்வத்தாலும், கொடும் கோபத்தாலும், பொல்லாத காமத்தாலும், பேராசையினால் பிறர் பொருளை அபகரித்ததாலும், பிறர் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுகின்ற காரணத்தாலும் வருகின்றது என்பதை அறியலாம். பாவ சுமைகளை நீக்கிட விரும்புகின்றவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து மாதம் ஒருவருக்கேனும் பசியாற்றுவித்தும், கருணையே வடிவான முருகப்பெருமான் திருவடியை “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்று அதிகாலை 10 நிமிடமேனும் மந்திர ஜெபம் செய்திடல் வேண்டும். மந்திர ஜெபம் செய்ய செய்ய ஒருவர் செய்திட்ட வினைகளுக்குரிய காரணங்களை உணரச் செய்து மீண்டும் வினை சேராதிருக்கும் உபாயம்தனையும் அறிவினால் அறிந்து தெளிவடைவார்கள். முருகன் திருவடியை பூசித்தால் முன் வினையும் பின் வினையும் அற்று போகும்.