News
APRIL 2024
குரு உபதேசம் – 3998
முருகா என்றால், பல கோடி யுகங்களாக தவம் செய்து வெற்றிகண்டு பெற்ற ஞானானந்த அனுபவத்தையும், தாம் அடைந்த உயர் ஞானத்தையும் தாம் பெற்ற பிறவாநிலைதனையும் தமது திருவடி பற்றினோர்க்கும் அருளி தமது சீடர்களுக்கும் தாம் வெற்றிகண்ட வகையிலே அவர்களையும் நடத்தி சென்று, வெல்ல முடியாத காமதேகத்தை வென்றிட உதவி செய்து, உடன் வந்து தாம் அடைந்த அருட்ஜோதி நிலையை தமது திருவடி பற்றிய சீடனையும் அடைந்திட செய்து தம்மைப் போலவே ஆக்கி கொள்வான் முருகப்பெருமான். இது சத்திய வாக்காகும்.