News
APRIL 2024
குரு உபதேசம் – 4014
முருகனை வணங்கிட, ஞானவாழ்வை பெறவும், மரணமிலாப் பெருவாழ்வை பெறவும், மனிதனாய் பிறந்த அனைவருக்கும் வாய்ப்புகள் இருந்தும் அவர்களால் பெற முடியாமல் போனதற்கு காரணம் என்னவெனில் அவரவர் முன்ஜென்மங்களே உயிர்களை கொன்றதாலும், புலால் உண்டதாலும், பிறர் சொத்தை அபகரித்ததாலும், நன்றி மறந்ததாலும், வஞ்சனை செய்து ஏமாற்றியதாலும் இப்படி பலபல வழிகளிலே அவர்கள் செய்திட்ட பாவங்களெல்லாம் பாவவினைகளாக மாறி வாய்ப்பிருந்தும் ஞானத்தைப் பற்றியோ மரணமிலாப் பெருவாழ்வைப் பற்றியோ அறியவொட்டாமல் தடை செய்கிறது. அப்படியே அறிந்து கொண்டாலும் அந்த துறையில் அவன் முன்னேற நினைத்தபோது சந்தேகமாக மாறி அவனை வாட்டி வதைத்து முயற்சியிலிருந்து விலக செய்கிறது. அதையும் தாண்டி நெறி நிற்க மும்மலக்கசடை நீக்கிவிட்டால் ஞானவழி செல்லலாம் என்றும், அதற்கு யோக பயிற்சிகள் தேவை என்றும், தாயினும் மிக்க தயவுடைய முருகப்பெருமான்தான் இதற்கு தலைவன் என்றும் முருகனின் ஆசி இல்லாமல் யோகம் செய்யவோ ஞானமடையவோ முடியாது என்பதையும் அறியலாம்.