News
APRIL 2024
குரு உபதேசம் – 4018
முருகப்பெருமானை வணங்கிட, இந்த பிரபஞ்சத்திலே எந்த ஒன்று தோன்றினாலும் அது இயற்கை நியதிக்கு உட்பட்டு தோன்றிய அனைத்தும் ஒரு கால பரியந்தத்தில் அழிந்தே தீரும். ஆனால் எல்லாம்வல்ல முருகன் அருள் கிடைக்குமானால் அழியாது அழிவிலிருந்து மீண்டு, மீண்டும் தோன்றாமல் தம்மை காத்து என்றும் அழியா நிலைதனை பெறலாம். அதாவது பழமானது மேலும் பழுத்தால் வீழ வேண்டும் என்பது இயற்கை நியதி. ஆனால் ஞானபண்டிதன் ஆசியை பெற்றால் பழம் மீண்டும் காயாகும். காயான பழம் மீண்டும் பழம் ஆகவே ஆகாது. இரும்பு முருகன் அருளால் தங்கமாகும். தங்கமாக மாறிய இரும்பு ஒருபோதும் இரும்பாக மாறாது. அதுபோல மரணத்தை தரக்கூடிய முதுமை, முருகன் அருளால் இளமையாக மாற்றமடைந்து விட்டால் அது ஒரு போதும் மீண்டும் முதுமையாக மாறவே முடியாமல் போய் என்றும் மாறா இளமையுடன் அழிவற்ற தன்மையுடையதாகி மரணமிலாப் பெருவாழ்வை அருளிவிடும்.