News
APRIL 2024
குரு உபதேசம் – 4021
முருகனை வணங்கிட, சிற்றின்பத்தில்தான் பேரின்பம் உள்ளதென்பதை முற்றும் உணர்ந்து சிற்றின்பத்தினை வென்று பேரின்பத்தை அடைந்து முற்றுப்பெற்ற முதல் முனிவன் முருகப்பெருமான்தான் என்பதை அறிந்து கொள்ளலாம். பேரின்ப நிலை எய்திய முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றினாலன்றி சிற்றின்பத்தின் இயல்பையோ, பேரின்பத்தின் இயல்பையோ அறிய முடியாது என்றும், சிற்றின்பத்திலிருந்து பேரின்பத்தை அடையும் வழிமுறையையும் அறிய முடியாது என்பதையும் தெளிவாக அறிந்து கொண்டு பேரின்பமளிக்கும் அதிகாரம் முருகப்பெருமான் ஒருவனுக்கே உண்டென்பதையும் அறிந்து கொள்ளலாம்.