News
APRIL 2024
குரு உபதேசம் – 4024
முருகனை வணங்கிட, சதானந்த நிலை நின்று அருட்பெருஞ்ஜோதி வடிவினனாகி எண்ணிலா கோடி பரந்து விரிந்து அருள் பிரகாசமாய் சொல்லொண்ணா பேரானந்த நிலை நின்று அருளும் முருகப்பெருமான் அமைதியுடன் பேரானந்த நிலை நின்று அருள் புரிகின்றனன்.
பேரானந்த நிலை நிற்கும் முருகனை அழைத்தாலன்றி நம்மீது அவன்தன் அருட்கண் பார்வை திரும்பாது. இவ்வுலகினிலே உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டு ஜீவதயவின் வழியில் தூய நெறி வழி நடந்து, எவ்வுயிருக்கும் தீங்கு நினையாது உள்ள மென்மையான உள்ளமும், யாருக்கும் இடையூறு செய்யாத எண்ணமும் உடைய பண்பாளர்களாய் தேவத்தன்மையோடு உள்ள பண்புடையோரும், பத்தினி பெண்டிரும், பக்தர்களும் சான்றோர்களும், பஞ்சபராரிகளும் அழைத்தால் அக்கணமே அருள் செய்வான் முருகன் என்றும், உயிர்க்கொலை செய்து புலால் உண்போரும், பிறருக்கு இடையூறு செய்வோரும், ஜீவதயவை மறந்தவரும், வன்மனம் உள்ளோரும், குணக்கேடுகள் உடையோரும், தீயஎண்ணம் உடையோருமான அசுரத்தன்மை உடையோர் எவ்வளவு அழைத்தாலும் முருகன் திரும்பான் எனவும் அறியலாம்.