News
MAY 2024
குரு உபதேசம் – 4043
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், ஆறறிவு உள்ள மனிதனுக்கு மிகமிக பொருத்தமானது சைவ உணவே என்பதும், அதுவே இயற்கை அவனுக்கு அளித்த நியதி என்பதையும் அறியாமல் உயிர்க்கொலை செய்து புலால் உண்ணுவது என்பது கடவுள் கொடுத்த அறிவை புரிந்து கொள்ளவில்லை என்றும், ஜென்மத்தைக் கடைத்தேற்ற முடியாமல் உயிர்க்கொலை செய்த பாவத்தால் மீண்டும் மீண்டும் பிறவிப்பிணிக்கு ஆளாகி கடவுள் அருளிய மரணமிலாப் பெருவாழ்வை கடைசி வரை பெற முடியாமல் போய்விடுகிறான் என்பதையும் அறியலாம். முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி வணங்கி ஆசி பெற்றிட உயிர்க்கொலை பாவத்திலிருந்து விடுபட்டு மரணமிலாப் பெருவாழ்வையும் பெறலாம் என்பதை அறியலாம்.