News
MAY 2024

குரு உபதேசம் – 4054
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், உலகையே காக்கும் வல்லமை பெற்ற முருகப்பெருமான் அன்பர் அன்போடு மனம் உருகி அழைத்தால் அக்கணமே தோன்றி அஞ்சேல் யாமிருக்க பயம் ஏன்? என்று அருள் செய்யும் வல்லமை பெற்றவன். முருகப்பெருமான் தோன்றி அருள் செய்ய வேண்டுமாயின் அன்பர்கள் தினமும் காலை பத்து நிமிடமும், மாலை பத்து நிமிடமும், இரவு பத்து நிமிடமும் ஒரு தீபமேற்றி வணங்கி ஓம் முருகா என்றோ ஓம் சரவணபவ என்றோ, ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி என்றோ, ஓம் சரவணஜோதியே நமோ நம என்றோ தீபத்தின் முன் அமர்ந்து ஜெபிக்க ஜெபிக்க அன்பர் ஏற்றும் ஜோதியில் தோன்றி அருள் செய்வான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.
