News
MAY 2024
குரு உபதேசம் – 4055
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால், பால பருவம், வாலிப பருவம், முதுமைப் பருவம் ஆகிய மூன்று நிலைகளும் உண்டாகி இறுதியில் அனைத்தும் அழிந்து போவதும் இயற்கையால் வந்தது என்றும், இயற்கையால் விதிக்கப்பட்ட இந்த பருவங்களை கடந்து மாற்றி, என்றும் மாறாத அழிவில்லாத இளமைப் பருவத்தை அடையலாம் என்பதையும் அதுவே மரணமிலாப் பெருவாழ்வாகிய பெருநிலை என்பதையும், அதை தவ முயற்சியால், தயவின் துணையால் அடையலாம் என்பதையும் முதன் முதலில் முருகப்பெருமான் தான், இத்தவத்தை கண்டு பிடித்தார் என்பதையும் அறியலாம்.
முருகன் அருளை முழுமையாக பெற்றிட்டால் முருகப்பெருமானை வணங்கி வணங்கி அருள் பெற்றவரும், மரணமிலாப் பெருவாழ்வை பெறலாம் என்பதையும் அறியலாம். முருகனது அருளும், நாம் பிற உயிர்களுக்கு இரங்கி இதம் புரிந்து செய்கின்ற ஜீவதயவின் வல்லமையும் கூட கூட, இத்தவத்தின் நுட்பங்களெல்லாம் முருகப்பெருமானே நம்மை சார்ந்து நம்மை வழி நடத்தி, நம்மை அருளாளனாகவும் தயவுடையோராகவும் மாற்றி நம்மை நரகத்தில் வீழ்த்தி மரணத்தை தருகின்ற வினைகளை, மும்மலங்களை ஒழித்து நமது ஜென்மத்தைக் கடைத்தேற்றி, என்றும் அழிவில்லாததும், என்றும் இளமையானதுமான ஒளி பொருந்திய ஒளி தேகத்தை நமக்கு அருளி மரணமிலாப் பெருவாழ்வையும் தந்து நம்மையும் முருகனைப் போலவே ஆக்கிக் கொள்வான் என்பதையும் அறியலாம்.