News
JUNE 2024
குரு உபதேசம் – 4066
முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், பெறுதற்கரிய மனிதப் பிறவியைப் பெற்றவர்கள் புண்ணிய பலத்தை பெற்றும் முருகனது அருளை முழுமையாகப் பெற்றும் இனி பிறவா மார்க்கமாகிய மரணமிலாப் பெருவாழ்வை அடையலாம் என்பதை அறியலாம்.
முருகனது ஆசியைப் பெற உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டும் வருவதோடு, எந்த அளவிற்கு பிற உயிர்களுக்கு உதவி செய்கின்றோமோ அந்த அளவிற்கு ஜீவதயவு பெருக்கம் அடையுமென்றும், எந்த அளவிற்கு உயிர்கள் மகிழ்வுறுகிறதோ அந்த அளவிற்கு அறிவு தெளிவடையும் என்பதையும் உணர்ந்து, பிற உயிர்களுக்கு செய்கின்ற பரோபகாரச் செயலை தவறாது செய்து, ஜீவதயவின் தலைவன் முருகப்பெருமானின் ஆசியைப் பெறலாம் என்பதை அறியலாம்.