News
JUNE 2024

குரு உபதேசம் – 4073
முருகா என்றால், பலஜென்மங்களில் செய்த பாவங்கள் மது அருந்துதல், புலால் உண்ணுதல், மற்ற உயிர்களுக்கு இடையூறு செய்து மகிழ்ச்சியடைதல் ஆகிய குணக்கேடுகளே பொல்லா நரகத்தில் நம்மை தள்ளி விடும் என்பதை அறிந்து கொள்ளலாம். பொல்லா நரகத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, வீரசைவ உணவை உண்டும், காலை மாலை “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்று குறைந்தது ஆயிரத்தெட்டு முறையேனும் மகாமந்திரத்தை ஜெபித்து வரவேண்டும். மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்க வேண்டும். வாய்ப்பு இல்லையெனில் காக்கைக்கேனும் சிறிது உணவினை வைக்க வேண்டும். இப்படி செய்து வரவர, வினைகளிலிருந்து விடுபடலாம் என்று அறியலாம்.
