News
JULY 2024

குரு உபதேசம் – 4098
முருகா என்றால், தாய்மை குணம் உள்ள அகத்தீசனை பூசித்தால் எனது ஆசியை பெறுவது எளிது என்பதை முருகனே உணர்த்த உணர்வார்கள்.
முற்றுப்பெற்ற ஞானியர்கள் தலைவன் திருவடியைப் பற்றிட்டால் யாருக்கும் எட்டா இறைவனாம் முருகனை எளிதினில் எட்டிவிடலாம் என்பதையும் உணரலாம். முருகப்பெருமான் முதல் அகத்தீசன், அருணகிரிநாதன், வள்ளல்பெருமானார், இராமலிங்க சுவாமிகள், மகத்துவம் பொருந்திய மாணிக்கவாசகர், வல்லமை மிக்க திருஞானசம்பந்தன் இன்னும் அநேகம் கோடி ஞானிகள் ஆசிகளைப் பெற விரும்புகின்றவர்கள் கட்டாயம் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சைவ உணவை மேற்கொண்டும் உலகத்திலேயே மிகச் சிறந்ததும், ஒப்பற்றதும், தன்னிகரில்லாததும், தனிப்பெருமை வாய்ந்ததும், பாகுபாடற்றதும், எல்லா ஞானிகளையும் ஈர்த்து நமக்கு ஆசிகளை பெற்றுத் தர வல்லதும், ஜென்மத்தைக் கடைத்தேற்ற வல்லதுமான சித்தர்கள் போற்றித் தொகுப்பினை பயபக்தியுடன் வீழ்ந்து வணங்கி அந்த வேதத்தின் உட்பொருளாம் வேதநாயகனாம் முருகப்பெருமானே நம்முன் உள்ளதாய் எண்ணி நூலதனை முருகனாய் பாவித்து தொட்டு வணங்கி பயபக்தி விசுவாசத்துடன் பணிந்து வணங்கி கட்டாயம் காலை மாலை என இரு வேளைகளிலும் தவறாது தினம் தினம் பாராயணம் செய்திடல் வேண்டும்.
