News
JULY 2024
குரு உபதேசம் – 4099
முருகா என்றால், ஓடும் நீரான ஆற்றை கடக்கக்கூட கடுமையான பயிற்சியினால் நீச்சலடித்து கடந்து விடலாம். ஆயின் படகினால் சுலபமாக கடந்து விடலாம். ஆனால் நீந்தி கரை சேரமுடியாத பெருங்கடலைக்கூட பெரிய கப்பல்கள் துணையால் கடந்து விடலாம். ஆனால் எல்லையில்லா பிறவிப் பெருங்கடலை கடக்க எந்தஒரு சாதனமும் இல்லை. ஆயினும் எம்பெருமான் முருகனது திருவடித்துணையெனும் தெப்பம் கிடைத்து விட்டால் கடக்க முடியாத பிறவிப் பெருங்கடலையும் எளிதில் கடந்து கரையேறி பிறவாநிலைபெற்று, பெறுதற்கரிய வீடு பேற்றினையும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.