News
AUGUST 2024
குரு உபதேசம் – 4121
முருகா என்றால், பசித்த ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டுமென்ற உணர்வு வரும். உணவளிப்பது சிறப்பு என்பதை உணர்ந்து அந்த உணவை கடவுளால் படைக்கப்பட்ட பிற ஜீவர்களுக்கு கொடுக்கும் போது உள்ளமும், முகமும் மலர்ந்திட கனிவு கொண்டு உண்போர் மனம் மகிழ சுவையுடன் அவர்கள் உண்டு மகிழ்வதை கண்டு ரசிக்கின்ற மென்மையான மனமும் முருகன் அருளால் கிடைத்திடும்.
உண்டோர், உண்டு உளமும், உடலும், ஆன்மாவும் மகிழ்கின்ற தருணத்திலே கடவுள் ஒளி பிரகாசிக்கின்றதையும், ஜீவதயவு ஓங்கி நிற்கின்றதையும் பசித்தோர் முகம் மகிழ்வதனுடே பார்க்கின்ற அறிவையும் பெறலாம்.