News
AUGUST 2024
குரு உபதேசம் – 4141
முருகா என்றால்:
காமம் அற்று போகும்.
பொறாமை நம்மை விட்டு விலகும்.
கோபம் நீங்கிவிடும்.
பேராசை அறவே இருக்காது
பழிவாங்கும் உணர்ச்சி ஏற்படாமல் பகைவனுக்கும் அருள் செய்யும் மனப்பாங்கு வரும்.
லோபித்தனம் நீங்கி தயைசிந்தை உண்டாகும்.
தாய்மை குணமுடைய முருகப்பெருமானது திருவடிகளைப் பற்றி பூசித்தால் நம்மிடம் உள்ள தீயன ஒழிந்து நன்மைகள் அனைத்தையும் பெறுவதோடு மேற்கண்ட குணப்பண்புகளை முழுமையாகப் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.