News
SEPTEMBER 2024
குரு உபதேசம் – 4142
முருகனை வணங்கிட : பெறுதற்கரிய மானுட பிறவியைப் பெற்றவர்கள், இந்த உடம்பின் துணை கொண்டே பரவாழ்வை அடைய செய்கின்ற முயற்சிகளும், செயல்பாடுகளுமே சாகாக்கல்வி என்பதையும் அறியலாம். சாகாக்கல்வி கற்பிப்பது அன்று, கற்பதும் அன்று. அது முருகப்பெருமானின் அருளால் அவரவருள்ளும் எழுகின்ற ஞானக்கல்வியாகும். அப்படிப்பட்ட ஞானக்கல்வியை கற்று ஞானம்அடைய விரும்புகின்றவர்கள் முதலில் உயிர்க்கொலை தவிர்க்க வேண்டும். உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து சைவ உணவை மேற்கொள்ள வேண்டும்.
தினம்தினம் தவறாமல் காலை பத்து நிமிடமும் மாலை பத்து நிமிடமும் முடிந்தால் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு ஒரு பத்து நிமிடமும் “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ மகாமந்திரங்களை ஜெபித்து வரவேண்டும். மாதம் குறைந்தது ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து வரவேண்டும். இப்படி செய்வதே சாகாக்கல்வியாகிய ஞானக்கல்வியின் அடிப்படையாகும். இதுவே ஞானக்கல்வியின் தொடக்க கல்வியாகும்.
இப்படி தொடர்ந்து செய்து செய்து முருகப்பெருமான் அருளைப் பெறவேண்டும்.