News
SEPTEMBER 2024
குரு உபதேசம் – 4143
முருகப்பெருமானை பூஜித்திட்டால் : காலத்தையும் அறிந்து வெல்லலாம், காலனையும் அறிந்து வெல்லலாம். காலத்தையும் காலனையும் வென்று பொடிப்பொடியாக்கிய கந்தபெருமான் திருவடியைப் பற்றி பூசிப்பவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பை பெறுவார்கள்.
கருணைக்கடல் கந்தபிரான் திருவடியை மனமுருகி பூஜித்தால்தான் காலத்தை வென்று காலனையும் வெல்கின்ற சாகாக்கல்வியை கற்க முடியும். அதை விடுத்து எத்துணை கல்வி கற்றாலும் பயனில்லை, எத்துணை அறிவு இருந்தாலும் பயனில்லை, எத்துணை ஆற்றல் இருந்தாலும் பயனில்லை, வெல்லற்கரிய மாமாயை வெல்லும் சாகாக்கல்வியை கற்காவிட்டால் எந்த பயனும் இல்லை என்பதை அறிந்து கருணை வேள் கந்தன் திருவடியைப் பற்றி பூசித்து ஆசி பெறுவோம்.
மனமாய்கை அற்ற மாமுனிவன் திருவடியே
இனமாக எண்ணியே ஏத்துவோம் தினமே.