News
SEPTEMBER 2024
குரு உபதேசம் – 4144
முருகனை பூஜித்திட : உணவிலே சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவையும், சிந்தையில் தூய்மை உண்டாகி சிந்தையில் சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவும், செயல் தூய்மை உண்டாகி செயலிலே சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவும், சொல்லிலே தூய்மை உண்டாகி, சொல்லிலே சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவும், பார்வையிலே சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவும் பெற்று தீவிர சைவநெறி நின்று முருகனது ஆசிகளை முழுமையாக பெறலாம்.
உணவிலே சைவம் : தாவர உணவினை மட்டும் மேற்கொள்ளுதல்.
சிந்தையில் சைவம் : எந்த வகையிலும் பிறஉயிர்களுக்கு சிந்தையில் கூட தீங்கு எண்ணாதிருப்பதே சிந்தையிலே சைவமாகும்.
செயலிலே சைவம் : தன் செயலால் தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் தீமை பயக்காமல் நன்மையே தருவதாக அமைகின்ற செயல்களை செய்வதேயாகும்.
சொல்லிலே சைவம் : எந்த வகையிலும் நமது சொற்களால் பிறர் மனம் புண்படாமல் நடப்பதே சொல்லிலே சைவமாம்.
பார்வையிலே சைவம் : பிற உயிர்களை இனிமையாக பார்த்தல்
இப்படி உணவில் சைவம், சிந்தையில் சைவம், செயலிலே சைவம், சொல்லிலே சைவம், பார்வையிலே சைவம் அனைத்தையும் அறிந்து கடைப்பிடிப்பதற்கு சைவத்தலைவன், சைவமே வடிவான ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமானின் திருவடிகளே துணையாகும்.
முருகனது திருவடிகளைப் பற்றி பூஜிக்க பூஜிக்க தூயசைவநெறி நின்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
போற்றுவோம் முருகப்பெருமான் திருவடியை
பெறுவோம் பேரின்ப வாழ்வை!
சைவத்தலைவன் முருகனைப் போற்றுவோம்
வையகம் போற்ற வாழ்வோம் நலமே!@
தூய்மையோடு வாழ வேண்டுமாயின் தூயவன் முருகப்பெருமான் திருவடிகளை பூசித்தாலன்றி தூய்மைபெற முடியாது. இது மறைகளெல்லாம் ஓங்கி உரைத்த இறுதி தீர்ப்பாகும்.