News
SEPTEMBER 2024

குரு உபதேசம் – 4147
முருகனை வணங்கிட : பசி, காமம், நரை, திரை, மூப்பு, பிணி ஆகியவற்றை வென்று, என்றும் இளமையாக அழிவிலாத ஒளி உடம்பை பெற்றவன்தான் முருகப்பெருமான். அவனது திருவடியைப் பற்றி பூஜித்து ஆசி பெறுவதே உண்மையான அறிவும், சாகாக்கல்வியும் ஆகும்.
பற்றற்ற முனிவன் பாதம் பணிந்திட
பற்றற்ற வாழ்வும் பரவாழ்வும் தரும்.
கற்றறிந்து சொன்ன கருத்து இதுவாகுமே
உற்றது சொன்னோம் ஓதி உணர்வீர்.
