News
SEPTEMBER 2024

குரு உபதேசம் – 4152
முருகனை வணங்கிட : மக்களை வழிநடத்தவல்ல சமூக சான்றோர்க்கும் மக்களை கடைத்தேற்றிடவல்ல நெறி உரைத்து இம்மை மறுமைக்கு உபாயமளிக்கும் ஆன்மீக சான்றோர்க்கும் அருள் செய்யும் வல்லமை ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமானுக்கே உண்டு என்பதையும் அறியலாம்.
செந்தழலாம் முருகனின் செவ்வேள் திருவடியை
வந்தித்தே வாழ்த்துதல் நலமே!
வற்றா கருணை வழங்கும் முருகனை
சற்றேனும் சிந்திக்க தானவனாமே.
ஆற்றலாம் முருகனின் அருளை தினமும்
போற்றியே வாழ்வர் புண்ணியரே.
