News
SEPTEMBER 2024

குரு உபதேசம் – 4159
முருகனை வணங்கிட : ஜீவதயவு, ஜீவகாருண்யம், அன்பு செலுத்தல், தயவு காட்டல், கருணை செய்தல், விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், தீயன மறத்தல், அரவணைத்தல், ஒத்து போதல் என ஜீவர்களுக்கு மகிழ்வையும், நன்மையும் பயக்கக்கூடிய அனைத்து நல்ல பண்புகளுமே முருகன்தான் என்பதை அறியலாம். ஆதலின் உலகினிலுள்ள அனைத்து நற்பண்புகளுமே முருகன் அருள்கொடைதான் அவனே நற்பண்பாய் நம்முள் தோன்றுகிறான், நற்பண்பே முருகனாயும் ஆகிறான் என்பதை அறிவதே சிறப்பறிவு அதை கற்பதே சாகாக்கல்வி.
தயவு என்பதே முருகனாகும், முருகப்பெருமானே தயவாகும்.
அற்புதன் முருகன் அடியைப் போற்ற
கற்பதே சாகாக் கல்வியாகும்.
மகத்துவம் பொருந்திய மணிவாசகன் திருவடியே
அகத்துள் வைத்து ஆராதனை செய்வோம்.
வள்ளலார் திருவடியை வாழ்த்தி வணங்குவோம்!
எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ்வோம்!
திருமூலன் திருவடியை தினமும் போற்ற
கருமூலம் கடக்க காணுமே உண்மை.
மார்க்கண்டேய முனிவனை மனமுருகி பூசிக்க
யாருக்கும் துன்பமில்லை அறிந்த உண்மையே!
– குருநாதர், முருகப்பெருமானின் அவதார ஞானி,
ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்
