News
SEPTEMBER 2024

குரு உபதேசம் – 4166
முருகனை வணங்கிட: தன்னைப் பற்றி அறிகின்ற அறிவே சிறப்பறிவாகும் என்றும், அதுவே சாகாக்கல்வி என்றும் அறியலாம்.
சாகாக்கல்வியை முருகன் அருளினால்தான் பெறக்கூடும் என்றும், முருகன் அருளைப் பெற ஜீவதயவே சாதனமாகும் என்பதையும் உணர்வான்.
உலக உயிர்களிடத்து எந்த அளவிற்கு ஜீவதயவை செலுத்துகிறோமோ அந்த அளவிற்கு அந்த ஜீவதயவே தவமாய் மாறி ஜீவதயவின் தலைவன் முருகனது ஆசியைப் பெற்று தவத்தினால் வெற்றி பெற்று தன்னையறியும் சிறப்பறிவான சாகாக்கல்வியை கற்று ஞானம் அடையக் கூடும் என்பதையும் அறியலாம்.
