News
OCTOBER 2024

குரு உபதேசம் – 4175
முருகனை வணங்கிட: மனம், வாக்கு, காயத்தால் செய்த பாவங்களை உணரச் செய்தும் மீண்டும் அதுபோன்ற குற்றங்கள் ஏற்படாவண்ணம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய அறிவைப் பெறலாம்.
மகத்துவம் பொருந்திய மணிவாசகப் பெருமானை
அகத்துள் வைத்தே ஆராதனை செய்வோம்.
முற்றும் உணர்ந்த முருகன் திருவடியை
பற்றிக் கொள்வதே பயனுடைய செயலாகும்.
தாய்மை குணம் தந்த முருகனை
வாய்மையாய்ப் போற்றி வழிபடுதல் நலமே.
கற்றதன் பயனே கழல் பணிதல் என்றே
உற்றநல் அறிவென்றே உண்மை உணர்வோம்.
