News
OCTOBER 2024
 
          குரு உபதேசம் – 4179
முருகனை வணங்கிட: ஒரு செயலை செய்வதற்கு முன்னரே அச்செயலைப் பற்றி சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுத்து செய்பவன் புண்ணியவான் என்றும், ஒரு செயலை செய்துவிட்டு அதன் பின் அச்செயலைப் பற்றி சிந்தித்து பார்ப்பவன் சாதாரண மனிதன் என்றும், ஒரு செயலைச் செய்துவிட்டு அச்செயலினைப் பற்றியோ அச்செயலின் விளைவைப் பற்றியோ சற்றும் சிந்திக்காமல் இருப்பவன் விலங்கினத்திற்கு ஒப்பானவன் என்பதையும் அறிந்து, இதில் நாம் எந்த நிலையில் உள்ளோம் என்பதையும் அறிந்து முருகனது திருவடிகளைப் பற்றி பூசித்து பூசித்து செயலைச் செய்வதற்கு முன்னரே சிந்தித்து பயனுள்ள செயல்களை மட்டுமே செய்கின்ற அறிவைப் பெறலாம்.
நலமெல்லாம் பெற்ற நாதனாம் முருகனை
நலம் பெறவே போற்றுவோம் நாளும் துதித்தே.
திடமாம் முருகனின் திருவடி பூசிக்க
திடமாம் வாழ்வு சித்தியும் உண்டாம்.
தினையளவாம் முருகனின் திருவடியைப் பூசிக்க
பனையளவாம் காட்டுமே பயன்.
 
         
								 
								





 
															 
															