News
JANUARY 2025

குரு உபதேசம் 4291
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
முன்செய்த புண்ணிய பலத்தாலும், பூஜை பலத்தாலும், உலக நன்மைக்காக முருகப்பெருமானால் தேர்ந்தெடுக்கப்பட்டு வாசி நடத்திக் கொடுக்கப்பட்டபின் வாசி நடத்தி கொடுக்கப்பட்டவன் பொருள் பற்றிற்கோ அல்லது பந்த பாசத்தில் அகப்பட்டோ நீதி தவறுவானேயானால் கடுமையான தண்டனைக்கு உள்ளாகி முருகப்பெருமானால் தண்டிக்கப்படுவான் என்பதை அறியலாம். முருகப்பெருமானை வணங்கி உலக நன்மைக்காக பாடுபடுகின்ற தொண்டர்களின் பூர்வ புண்ணியமும் பூஜை பலனும் கூடி, நிற்கும் சமயத்தில் அத்தொண்டர்கள் அறியா வண்ணமே முருகப்பெருமானால் வாசி நடத்திக் கொடுக்கப்பட்டு விடும். ஆதலின், தான் வாசி நடத்திக் கொடுக்கப்பட்டதை அறியாமலே தவறு செய்திட கூடும். ஆதலினால் எப்போதும் நெறிக்குட்பட்ட வாழ்வை வாழ வேண்டும் என்ற நீதியுடன் மேலான பயபக்தியையும் பெற வேண்டுமென்ற உணர்வையும் பெறலாம்.
………………
பற்றற்ற முருகனின் பாதம் பணிவதே
உற்ற தவமென்றே உரைப்பார் உண்மையே.
