News
JANUARY 2025

குரு உபதேசம் 4292
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
தொன்மையான இந்த உலகத்தில் ஞானம் என்ற சொல்லும் அதைத் தொகுத்து சொல்கின்ற நூல்களும் முருகப்பெருமானால் தான் உண்டாயின என்பதை அறியலாம்.
………………
தொன்மையாம் முருகனை தோத்திரம் செய்திட
இம்மைக்கும் மறுமைக்கும் இணையடி துணையே.
துணையாம் இணையடி தோத்திரம் செய்திட
வினையும் இல்லை விவேகம் உண்டாம்.
உண்டாம் நல்வினை ஓதி உணர்ந்திட
கண்டவர் கண்ட கருத்தே.
