News
FEBRUARY 2025

குரு உபதேசம் 4306
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் :
வீடுபேறு என்று சொல்லப்படுகின்ற விடுதலையை ஆன்மா அடைய விரும்பினால் சிறைப்பட்ட ஆன்மாவை விடுவிக்க வேண்டும். மும்மலமாகிய சிறையினின்று ஆன்மா விடுபட வேண்டுமெனில் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். எந்த அளவிற்கு உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டுபண்ணுகிறோமோ அந்த அளவிற்கு அறிவு தெளிவடையும், தெளிந்த அறிவே தன்னைப் பற்றி அறிகின்ற தகைமையை பெறுகிறது. தகைமை பெற்ற அறிவே தகைமையுடைய ஆன்மாவாக மாறுகிறது. இதை அடைய முருகப்பெருமான் திருவடித்துணையே கதி என்பதையும் அறிந்து முருகனது திருவடிகளைப் பற்றி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
