News
FEBRUARY 2025

குரு உபதேசம் 4308
முருகப்பெருமானின் ஆசி பெற்றிட்டால் :
பொதுமக்களின் வரிப்பணத்திலே அரசினால் பொதுமக்களுக்காக உருவாக்கியதும், பொதுமக்கள் நலனிற்காகவும் உண்டாக்கிய, பொது சொத்துகளாகிய இரயில் பாதைகள், சாலைகள், பேருந்துகள், இரயில் வண்டிகள், விமானம், விமானதளம், கப்பல், பாலங்கள், பொது விடுதிகள், பள்ளிக்கூடங்கள் இன்னும் அநேகம் அநேகம் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்குமாறு நடந்து கொள்வது சிவன் சொத்தை அழித்த பெரும் பாவத்திற்கு ஆளாக்கிவிடும் என்றும், பொது சொத்தாகிய மக்கள் சொத்து கடவுளாகிய சிவனது சொத்துகள் என்றும் அதற்கு சேதாரம் செய்தால் பாவியாகிவிடுவோம் என்பதையும் உணர்வதோடு பொதுசொத்தை பாதுகாக்கின்ற அறிவும், பிறர் பொதுசொத்தை சேதாரம் செய்வதை தடுக்கவும் ஆற்றலும் உண்டாகும். எனவே பொது சொத்தை சேதப்படுத்துவது தேசத் துரோகம் என்பதை உணர்வார்கள்.
