News
FEBRUARY 2025

குரு உபதேசம் 4311
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் :
பொறாமை, பேராசை, புலால் உண்ணுதல், மது அருந்துதல், திருடுதல், அராஜகம் செய்தல் போன்ற தீய பழக்கங்களே மனிதனை குற்றவாளிகளாக ஆக்குவதையும், முருகனருளால் தீவினைகள் அகன்று தீய செயல்களிலிருந்து தப்பிவிடலாம் என்பதை அறிந்து முருகனை வணங்க வணங்க, தவற்றிலிருந்தும் தப்பிவிடலாம், தவறு செய்து தண்டனைக்கு ஆளாகாமலும் தப்பிவிடலாம்.
ஞானசித்தர் காலத்திலே அவரவரும் தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமாயின் தவறு தெரியாமல் செய்துவிட்டாலும் அவர்களும் பெருங்கருணைத்தாய் முருகப்பெருமானின் திருவடிகளில் மனம் உருகி சரணடைந்து எந்த உயிர்களுக்கு துன்பம் செய்தோமோ அந்த உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டுபண்ணும்படி நடந்திட்டால் முருகனது அருள்கூடி தண்டனையிலிருந்து தப்பிக்கலாம்.
உதாரணமாக ஒருவனுக்கு திருமணமாகி மனைவியும், வயதான தாய்தந்தையும், குழந்தைகளும் உடைய குடும்பஸ்தன் இருப்பான். ஆனாலும் அவன் கட்டுப்பாடில்லாமல் நடந்து குற்றங்களைச் செய்துவிடுவான். அவனது குற்றங்களுக்கு தண்டனைப் பெற்றால், பாவம் அவனை நம்பிய மனைவியும் குழந்தைகளும் நடுத்தெருவிற்கு வந்துவிடும். வயதான தாய் தந்தையரும் ஆதரவற்றவர்களாகி விடுவார்கள். இதுபோன்ற இக்கட்டான சூழலில் உள்ளவனும் முருகனது திருவடிகளிலே சரணடைந்து மன்றாடி மன்னிப்பை கேட்டால் அவனது சூழல் கருதி முருகன் அருள்கூடி முருகப்பெருமான் அவனையும் ஏற்று மன்னிப்பார் என்பதையும் அறியலாம்.
ஆக மன்னிக்க கூடிய குற்றங்கள் சூழ்நிலை கருதி ஞானசித்தர் காலத்திலே மன்னிக்கப்படும். ஆனால் கொடிய குற்றங்கள் மன்னிக்கப்பட மாட்டாது என்பதையும் அறியலாம்.
