News
FEBRUARY 2025

குரு உபதேசம் 4315
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
நடைபெற உள்ள ஞானசித்தர் ஆட்சிக்கு தலைமை தாங்குகின்றவன் முருகப்பெருமானே என்று அறிகிற அறிவைப் பெறுவதோடு, அவனது திருவடிப் பற்றி பூஜைகள் செய்து ஆசி பெற்றிட்டால் ஞானசித்தர்கள் ஆட்சியிலே முருகனருளால் நாமும் தொண்டு செய்து நற்கதி அடையலாம் என்று அறியலாம்.
………………
ஆக்கமாம் முருகனின் அருளைப் போற்றவே
நோக்கம் அனைத்தும் நொடியில் சித்தியே!
சித்தியாம் முருகனின் திருவடியைப் போற்றிட
சத்தும் சித்தும் கைவசமாகுமே.
ஆகுமே நல்வினை அனைத்தும் சித்திக்கும்
வேகுமே வினைகள் வெந்தே வீழ்ந்திடும்.
