News
FEBRUARY 2025

குரு உபதேசம் 4317
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் :
முருகப்பெருமானை பூஜிக்க பூஜிக்க குருவருளைப் பெற்று ஞானசித்தர் காலத்தில் வாய்ப்பை பெற்றும், பெற்ற வாய்ப்பை பயன்படுத்தி கடைத்தேறிடவும் அருள்வான் முருகன்.
ஐய்யன் முருகனின் அருளைப் போற்றிட
வையகம் போற்ற வாழ்வர் திண்ணமே.
திண்ணிய முருகனின் திருவடி போற்றிட
எண்ணிய அனைத்தும் எளிதில் சித்தியே.
சித்தியாம் முருகனின் திருவடி போற்றிட
சத்தும் சித்தும் கைவசமாமே.
ஆகுமே சித்திகள் அனைத்தும் சித்திக்கும்
வேகுமே வினைகள் வெந்தே வீழ்ந்திடும்.
சிவவாக்கியன் திருவடியை தினமும் பூஜிக்க
பவவினைகள் அனைத்தும் பறந்தே போமே.
