News
MARCH 2025

குரு உபதேசம் 4337
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் :
கலப்படம் செய்வது பாவம் என்ற அறிவு வரும், லஞ்சம் வாங்குவது பாவம் என்றும் உணர்வான். பொதுசொத்தை அபகரிப்பதோ, சேதப்படுத்துவதோ குற்றம் செய்பவர் குலத்தையே நாசப்படுத்தும் என்பதையும் அறிந்து பாவியாகாமல் தன்னை காப்பாற்றிக் கொள்வான்.
தாய்க்கு அடுத்தப்படியாக மனித வர்க்கத்தை பாலூட்டி காப்பது பசுவாகும். தாய்க்கு நிகரான பசுவை துன்புறுத்துவதும், கொல்வதும் தாயைக் கொன்ற பாவத்தை நமக்கு சேர்த்துவிடும் என்றும் பசுவதை செய்யும் நாட்டில் மழை பெய்யாமல் நாடே பாலைவனமாகிவிடும் என்பதையும் அறிந்து பசுவதையை தடுப்பான். பஞ்சபராரிகளுக்கு தக்க பாதுகாப்பையும், அரவணைப்பையும் தருவான். முருகனது அருள் கூடிய நாட்டிலே நள்ளிரவிலே 12 மணியானாலும் இளம்பெண் தன்னந்தனியாக சென்றுவிட்டு வீடு திரும்பும் அளவிற்கு ஞானிகள் பாதுகாப்பு இருக்கும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
………………
ஆற்றலாம் அருணகிரி அருளிய திருப்புகழை
போற்றியே மகிழ்வர் புண்ணியரே.
புண்ணியவான் அருணகிரி புகன்ற அலங்காரம்
நண்ணியே கற்றிட நமனும் அஞ்சுவன்.
எந்தை கந்தனின் இணையடி போற்றிட
சிந்தையும் தெளிய சிவகதியும் உண்டாம்.
