News
MARCH 2025

குரு உபதேசம் 4338
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
ஞானிகள் ஆட்சியிலே பதவியில் அமர்வோர் ஜீவதயவுடையவராகவும், மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாகவும் இருப்பதோடு முருகனது அருளைப் பெற்றவர்கள்தான் பதவியில் அமர்வார்கள் என்பதையும் அறியலாம்.
நாட்டமாம் முருகனை நாளும் போற்றிட
வாட்டமும் இல்லை மனமும் செம்மையே.
செம்மையாம் முருகனின் திருவடியை போற்றிட
இம்மைக்கும் மறுமைக்கும் இணையடி துணையே.
துணையாம் இணையடி தோத்திரம் செய்திட
வினையும் இல்லை விவேகம் உண்டாம்.
உண்டாம் நல்வினை ஓதி உணர்ந்திட
கண்டவர் கண்ட கருத்து இதுவாகும்.
ஆகுமே நல்வினை அனைத்தும் சித்திக்கும்
வேகுமே வினைகள் வெந்தே வீழ்ந்திடும்.
வீழ்ந்திடும் வினைகள் வேரற்ற மரம்போல்
ஆழ்ந்து உரைத்த அறிவுரையாமே.
