News
MARCH 2025

குரு உபதேசம் 4339
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
ஞானவர்க்க தலைவன், ஞானபண்டிதன், முருகனை வணங்க வணங்க ஞானிகள் ஆட்சி உலகில் விரைந்து ஏற்படும் என்பதை அறியலாம்.
ஞானிகள் ஆட்சியில் அராஜகம் கட்டுப்படுத்தப்படும், விலைவாசிகள் குறையும், நேர்மையான ஆட்சி நடக்கும், லஞ்சம் ஒழியும், பருவமழை தவறாது பெய்து எங்கு பார்த்தாலும் செழிப்பாக இருக்கும், மக்கள் உண்மையுடன் இருப்பார்கள், எல்லா துறைகளும் சிறந்து விளங்கி எல்லா மக்களும், நிம்மதியாக அமைதியான ஆபத்தில்லாத வாழ்வை, அருளுடன் கூடிய வாழ்வை இனிமையாக சொர்க்கம் போல வாழ்வார்கள் என்பதையும் அறியலாம்.
கலியுக வரதன் கந்தனின் ஆட்சியால்
நலிவில்லை வாழ்வில் நன்மை உண்டாம்.
