News
MARCH 2025

குரு உபதேசம் 4341
முருகப்பெருமான் திருவடியை பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
ஞானவர்க்கத்தை தோற்றுவித்தவன் முருகப்பெருமான்தான் என்பதையும், கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்து உயிரினங்களிலும் நீக்கமற கலந்துள்ள முருகப்பெருமானின் உயர் பிறப்பான மனித வர்க்கத்தினுள்ளே ஏற்றத்தாழ்வை பார்க்கக் கூடாது. அப்படி பார்ப்பாராயின் எல்லா மனிதருள்ளும் உள்ள முருகப்பெருமானே அவர்களை தண்டிப்பான் என்பதையும் அறியலாம். ஆதலின் சாதி, மத, இன, மொழி, தேசத்தினால் மனிதர்களை பாகுபடுத்தி இழிவுப்படுத்தினாலோ, தண்டித்தாலோ, எல்லாம் வல்ல முருகப்பெருமானின் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதையும் அறியலாம்.
……………..
முக்கண் மைந்தன் முருகனைப் போற்றிட
தக்க துணையென்றே சாற்றுவர் நல்லோர்.
நல்லோர்கள் போற்றும் நாயகன் முருகனை
எல்லோரும் போற்றிட இன்பமே!
