News
MARCH 2025

குரு உபதேசம் 4343
முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற :
வெல்ல முடியாத காமத்தை வென்ற முருகனின் திருவடிகளைப் பற்றி பூசித்தாலன்றி காமதேகத்தை வெல்ல முடியாது என்பதை அறியலாம்.
……………..
கடந்தான் கந்தனின் கழலிணைப் போற்றிட
கடக்கத் துணையாம் கந்தன் கழலே.
அற்புத முருகனின் அருளைப் போற்றவே
கற்பக விருட்சம் கைவசமாமே.
ஆமாறு வேலவன் அருளைப் போற்றவே
காமதேனும் கைவசமாமே.
வஜ்ர வேலோனை வாழ்த்தி வணங்கிட
அட்சய பாத்திரம் அவருக்கே சித்தியே.
