News
MARCH 2025

குரு உபதேசம் 4344
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
பாசமாகிய சந்திர கலையையும், பசுவாகிய சூரிய கலையையும், பதியாகிய சுழிமுனையில் அறியச் செய்து பதியாகிய சுழிமுனையில் தானும் ஒடுங்கியிருந்து அருள் செய்வான் முருகப்பெருமான் என்று அறியலாம்.
இந்த வாய்ப்பை பெற விரும்புகின்றவர்கள் தயவே வடிவான முருகனின் அருளை முழுமையாகப் பெற்றால்தான் கடைத்தேற முடியும்.
தயவின் தலைவன் முருகனது அருளைப் பெற முதலில் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். தினமும் காலை பத்துநிமிடமும் மாலை பத்து நிமிடமும் இரவு பத்து நிமிடமும் “ஓம் முருகா” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ முருகனின் நாமங்களை மந்திரஜெபமாக மனமுருகி ஜெபிக்க வேண்டும். மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்க வேண்டும். இப்படி செய்ய செய்ய முருகனருள் கூடி யோக, ஞான இரகசியமெல்லாம் உணர்ந்து தலைவனை தன்னுள் வரச்செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்பதையும் அறிந்து கடைத்தேற்றலாம்.
……………..
தீர்க்கமாம் திருமூல தேவனை தரிசிக்க
பார்க்க கண்கள் பெற்ற பயனே.
தீர்க்கதரிசியாம் திருமூல தேவனை
பார்க்க கண்கள் படைத்தனன் முருகனே.
