News
MARCH 2025

குரு உபதேசம் 4346
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
இனி வெகு விரைவில் உலகப்பெருமாற்றம் குறுகிய காலத்திற்குள்ளாகவே நடந்து விடும் என்பதை அறியலாம்.
ஞானசித்தர்கள் ஆட்சி நடக்கின்ற ஞானயுக ஆட்சி காலத்திலே சித்தர் பெருமக்களே ஆட்சி நடத்துகின்றவர்களை சார்ந்து ஆட்சி நடத்துவார்கள் என்றும் இறைவனே மனிதனைச் சார்ந்து நடத்துகின்ற ஒரு புரட்சிகரமான அற்புதமான ஞானஆட்சி காலத்திலே ஜாதிகளும் மதங்களும் இவ்வுலகினில் இருக்காது என்பதும், ஜாதியை, மதத்தை விரும்புவோர் ஜாதி, மதத்தின் பெயரால் பாகுபாடு பார்த்தல் கூடாது என்றும், அப்படி பாகுபாடு பார்த்தால் அது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு ஜாதி, மத பாகுபாடு பார்ப்பவர் ஞானஆட்சியாளர்களால் தண்டிக்கப்படுவார்கள் என்பதையும் அறியலாம்.
ஜாதி, மத பாகுபாடு பார்ப்பது குற்றம் என்பதும், ஜாதியை காப்பாற்ற நினைப்பதும் மதத்தை காப்பாற்ற நினைப்பதும் தேசவிரோத செயலாகக் கருதப்படும் என்பதையும் அறியலாம்.
ஒட்டுமொத்த உலகையே ஒரு தாய் பிள்ளைகளாக பாவிக்கின்ற இறைவனாம் முருகப்பெருமானது ஆட்சியிலே மனிதவர்க்கத்திற்குள் பேதாபேதங்கள் பார்க்கக் கூடாது என்பதும், மனித வர்க்கத்திற்குள்ளே பிறப்பால் பிரிவினைகளை உண்டாக்கி உலக ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கின்ற இப்படிப்பட்ட கொடுமையான பழக்கம் முற்றிலும் இவ்வுலகினின்று நீக்கப்படும் என்பதையும் அறியலாம்.
முருகனை வணங்க வணங்க இதுவரை நம்முள் இருந்திட்ட இன, ஜாதி, மொழி, மத பேதங்கள் மறைந்து மனிதனாக பிறந்த அனைவரையும் ஒருதாய் பிள்ளைகளாக எண்ணுகின்ற உயர்பண்பு வரும்.
……………..
தகைமையாம் கடவுள் தந்த பிறவியை
பகைமையாய் பார்ப்பது பாவச்செயலே.
நீதியாய் நிகழ்த்திய கடவுள் படைப்பை
ஜாதி பேதம் பார்ப்பது பகைமையே.
இதமாம் கடவுள் இயற்றிய படைப்பை
மதபேதம் பார்ப்பது மடமை குணமே.
……………..
பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறவனே உயர்பிறவியாகக் கருதப்படுவான், பிற உயிர்களுக்கு துன்பம் தந்து வாழ்கின்றவன் இழிந்த பிறவியாகக் கருதப்படுவான்.
