News
APRIL 2025

குரு உபதேசம் 4354
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…
ஞானசித்தர்கள் ஆட்சியான முருகப்பெருமானே நேரில் தலைமையேற்கிற ஆட்சியிலே தவறு செய்பவர்கள் எவ்வளவு புகழ் வாய்ந்தவராயினும் சரி, எவ்வளவு செல்வம் படைத்தவராயினும் சரி, எவ்வளவு ஆள் பலம் உள்ளவராயினும் சரி, எவ்வளவு அதிகார பலம் உள்ளவராயினும் சரி, தவறு செய்துவிட்டால் புலியைக் கண்ட ஆடு நடுங்குவது போல தண்டனைக்கு பயந்தே ஆக வேண்டும். உறுதியாக நீதியின் முன் அவருக்கு தண்டனை கிடைக்கும் என்பதை உறுதியாக அறியலாம்.
……………..
உறுதியாம் முருகனை உருகியே பூசிக்க
கருதிய அனைத்தும் கைவசமாமே.
காலனுக்கு காலனாம் கந்தனைப் போற்றிட
ஞாலத்தை ஆள்வார் நமனும் அஞ்சுவன்.
பதஞ்சலி முனிவனை பணிந்தே போற்றிட
இதமாம் வாழ்வில் இன்பம் உண்டாம்.
பக்குவம் மிக்கதோர் பதஞ்சலி முனிவனை
தக்க துணையென்றே சாற்றுவர் நல்லோர்.
