News
APRIL 2025

குரு உபதேசம் 4355
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
இனிவரும் காலமெல்லாம் பந்தபாசத்தினால் உந்தப்பட்டு மயக்கத்தினால் ஆட்சி செய்தோர் விலகி, பந்த பாசமற்ற பொதுநலனில் அக்கறையும் தன்னலமற்ற தொண்டர்களும் முருகனது தலைமையிலே இவ்வுலகை ஆட்சி செய்வார்கள் என்பதை அறிவதோடு அந்தவித ஞான ஆட்சியில் முருகப்பெருமானின் அருளைப் பெற்ற சான்றோர்களே, பண்பாளர்களே இவ்வுலகை வழிநடத்தி அற்புதமாய் ஆட்சி செய்வார்கள் என்பதையும், முருகனது அருளைப் பெற்றால் நாமும் அந்த அற்புத உலகினிலே தொண்டு செய்கிற வாய்ப்பை பெறலாம் என்பதையும் அறியலாம்.
……………..
காக்கும் கடவுள் கந்தனைப் போற்றிட
நோக்கம் அனைத்தும் நொடியில் சித்தியே!
