News
APRIL 2025

குரு உபதேசம் 4357
முருகப்பெருமான் திருவடிகளை பூஜித்து ஆசி பெற்றிட்டால் …
சிவராஜயோகம், ராஜயோகம் என்பவை பெரும் தவசிகளுக்கே, முருகனது அருளை முழுமையாக பெற்றவர்களுக்கே உரியது என்றும் மண், பெண், பொன்னாசைகளை விட்டவர்க்கே இவை கைகூடும் என்றும் சிவராஜயோகம், ராஜயோகம் என்ற பெயரிலே சொல்லிக் கொடுப்பதாக மக்களை நம்ப வைப்பவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்றும், ராஜயோகம் உணர்வால் உணர்த்த ஆசான் உடம்பின் உள்ளே சார்ந்திருந்து செய்யப்படுகின்ற மிகப்பெரும் யோகம் என்பதையும் அறியலாம். யோகம் கற்றுக் கொடுப்பதல்ல, ஆசான் உள்ளிருந்து உணர்த்த உணர்ந்து வழிநடத்த செய்யப்படுகிற ஒரு பெரும் வேள்வியாகும் என்பதையும் அறியலாம்.
போலி சாமியார்கள் மிகுதி ஆக ஆக நாட்டில் பருவ மழை தவறும், இயற்கை சீற்றங்களும் வரும். கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றுவதால் கடவுளின் கோபத்திற்கும் ஆளாகி நாடு பொலிவிழந்து விடும்.
